பஞ்சாப்பில் பாஜகவின் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி; உறுதியாகும் நான்முனைப் போட்டி!

பஞ்சாபில் அகாலி தளம் கட்சியுடனான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், அங்கு நான்கு முனை போட்டி உறுதியாகியிருக்கிறது.
Parkash Singh Badal, pm modi
Parkash Singh Badal, pm modipt web

பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக வரும் ஜூன் 1 ஆம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோன்மணி அகாலி தளம், பாரதிய ஜனதா, LOK INSAAF கட்சி, பகுஜன் சமாஜ், பஞ்சாப் EKTA கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களையும், பாஜக, சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி 2 இடங்களையும் பிடித்தன. ஆம் ஆத்மி ஒரு இடத்தை மட்டும் பிடித்தது.

வரும் மக்களவைத் தேர்தலிலும் சிரோன்மணி அகாலி தளத்துடன் சேர்ந்து போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தியது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என சிரோன்மணி அகாலி தளம் முடிவு செய்துள்ளது. மேலும் பாஜக கேட்கும் ஐந்து இடங்களை ஒதுக்க முடியாது எனவும் சிரோன்மணி அகாலி தளம் தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க சிரோன்மணி அகாலி தளம் முடிவு செய்துள்ளது.

ஒரு புறம் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, இன்னொரு புறம் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளன. மூன்றாவது அணியாக சிரோன்மணி அகாலி தளம்- பகுஜன் சமாஜ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க உள்ளன. இதையடுத்து, தனித்து போட்டியிடும் பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com