\
முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!

முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!
Published on

ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். 

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இதையடுத்து இரவு 7.30 மணியளவில் மகாராஷ்டிர முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே.

பின்னர் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேளையில், அந்த செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் உற்சாக வெள்ளத்தில் அனைவரும் ஆட்டம் போடுகின்றனர். 2 எம்.எல்.ஏக்கள் மேஜை மீது ஏறி குத்தாட்டம் போடுகின்றனர். சிலர் மேஜை மீது ஆடுபவர்களை கீழே இறங்க சொன்ன பின்னர் அவர்கள் கீழே இறங்குவதோடு வீடியோ நிறைவடைகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com