காதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி!

காதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி!
காதலுக்கு எதிர்ப்பு: அப்பாவை எரித்துக் கொன்ற 10-ம் வகுப்பு மாணவி!

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த, தொழிலதிபர் அப்பாவை எரித்துக்கொன்ற மகள், காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின் (41). இவர் மனைவி பூஜாதேவி. இவர்களுக்கு 15 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயக்குமார் துணி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 17- ஆம் தேதி பூஜாதேவி, மகனுடன் குடும்ப விழா ஒன்றுக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் ஜெயக்குமாரும், அவர் மகளும் மட்டுமே இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில், ஜெயக்குமார் வீட்டு பாத்ரூமில் இருந்து புகை வெளிவந்ததால், அக்கம்பக்கத்தினர் தீயணைப் பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயை அணைத்தபோது, அங்கு ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கிடந் தது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் பெட்ரூமில் ரத்தக் கறை இருந்தது தெரிந்தது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. வீட்டில் ஜெயக்குமார் மகள் மட்டுமே இருந்ததால் அவரிடம் விசாரித்தனர். அவர் காலில் தீக்காயம் இருந்ததால், சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சொன்ன தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, அந்தப் பெண், வீட்டின் அருகில் வசிக்கும் பிரவீன் (18) என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். பிரவீன் பி.காம் படிக்கிறார். ஜெயக்குமார் வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்துள்ளார். இதைக் கண்டித்த ஜெயக்குமார். மகளின் போனையும் பிடுங்கி வைத்துள்ளார். இதனால் அப்பா ஜெயக்குமார், அம்மா பூஜா தேவி மீது மகளுக்கு கோபம். அப்பாவை, காதலனுடன் சேர்ந்து கொல்ல முடிவு செய்தார். 17-ஆம் தேதி இரவு பூஜாதேவி புதுச்சேரி சென்றதும் அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தார். அவர் தூங்கியதும், பிரவீனை வீட்டுக்கு அழைத்தார்.

இருவரும் கத்தியால் குத்தி ஜெயக்குமாரைக் கொன்றுவிட்டு, உடலை பாத்ரூமுக்கு கொண்டு சென்றனர். பின், மகள் வெளி யே சென்று இரண்டு மூன்று பாட்டில்களில் பெட்ரோல் வாங்கி வந்தார். அதை அவர் மீது ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர்கள் 2 பேரின் கால்களிலும் தீப்பற்றியது. அதைப் பொருட்படுத்தாமல், எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக வீட்டில் தீ பிடித்தது என்று நாடகமாட திட்டமிட்டனர். ஆனால் மாட்டிக்கொண்டனர்’’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பிரவீனையும் ஜெயக்குமாரின் மகளையும் போலீசார் கைதுசெய்தனர். அவர் மகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரவீனை சிறையில் தள்ளினர்.

பெற்ற மகளே, காதலுக்காக அப்பாவைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com