ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு: தாயை இரும்புக் கம்பியால் கொலை செய்த மகள்..!
ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்) உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷ்மி ரானா. வயது 21. கல்லூரியில் படித்து வரும் இவருக்கு ஆசிரியை ஒருவருடன் லெஸ்பியன் உறவு ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரஷ்மியின் அம்மா புஷ்பா தேவிக்கு தெரியவர அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘இந்த உறவு தவறானது. ஆசிரியை உடனான உறவை துண்டித்துக்கொள்’ என ரஷ்மியை கண்டித்திருக்கிறார் புஷ்பா தேவி. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்மி தனது இணையுடன் சேர்ந்து தனது தாயை கொலை செய்துள்ளார். இரும்புக் கம்பியால் தலையில் அடிக்கப்பட்டது புஷ்பா தேவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து ரஷ்மியின் தந்தை சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது தாயை தன் இணையுடன் இணைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் ரஷ்மி. இதனையடுத்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.