\
தன்னை பற்றிய மீம்களை தானே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து மகிழும் சசி தரூர்!

தன்னை பற்றிய மீம்களை தானே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து மகிழும் சசி தரூர்!

தன்னை பற்றிய மீம்களை தானே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து மகிழும் சசி தரூர்!
Published on
அரசியல் தலைவர்களை விமர்சித்து சமூக தளங்களில் மீம்கள் வருவது தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தன்னை பற்றி சமூக தளங்களில் கடந்த சில நாட்களில் வைரலாக பரவிய மீம்களில் சிலவற்றை தனது ஃபேஸ்புக் பக்கத்திலேயே பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
சசி தரூர் அண்மையில் ஓணம் கொண்டாட கேரளாவில் உள்ள தனது பூர்விக வீட்டிற்கு சென்றிருந்தார். ஓணம் கொண்டாட்டத்திற்கு பின் அங்குள்ள கோயிலில் சிதறு தேங்காயை சசி தரூர் உடைத்தார். இந்த படம்தான் கிரிக்கெட் மைதானம், தேநீர் கடை, பரதநாட்டிய மேடை என பல்வேறு பின்னணிகளில் சேர்க்கப்பட்டு பரவி வருகிறது. இந்த படங்களை பார்த்தாலே சிரிப்பு வருவதாக கூறி அவற்றை பகிர்ந்துள்ளார் சசி தரூர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com