\
குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார்?- மறுப்பு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார்?- மறுப்பு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ்

குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார்?- மறுப்பு தெரிவித்த தேசியவாத காங்கிரஸ்
Published on

குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என சரத் பவார் கூறியுள்ளதாக அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் சில முறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரிடமும் பிரசாந்த் கிஷோர் பேசினார்.

இந்நிலையில் சரத் பவாரை, குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தைகளின்போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com