”பிரதமர் தூக்கத்தை இழந்துவிட்டார்” - எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் குறித்து சரத்பவார் அறிவிப்பு!

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
sharad pawar
sharad pawarANI

பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கடந்த 23ஆம் தேதி அக்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பாட்னாவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார். இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பாட்னா கூட்டம்
பாட்னா கூட்டம்புதிய தலைமுறை

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2வது சுற்று கூட்டம் அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெற இருப்பதாகவும், அக்கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்று நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாட்னாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது.

பாட்னா கூட்டம்
பாட்னா கூட்டம்ANI

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது சுற்று கூட்டம் அடுத்த மாதம் ஹிமாச்சலில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com