கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக தான் பணமதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டதா என முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் சாடியுள்ளார்.
இதுபற்றி அவர் டிவிட்டரில், 99 சதவிகித பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு சதவிகித அளவிற்கே பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பது வெட்கக்கேடானது. இதுதான் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் சாதனையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கையில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்ததுடன் அப்பாவி மக்களையும் பலி வாங்கிவிட்டது. இதற்காக மக்களிடம் பிரதமர், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 1 சதவிகித கருப்பு பண புழக்கத்தை தடுக்க, 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த யோசனையை கூறிய பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.