\
‘செக்ஸி துர்கா’சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

‘செக்ஸி துர்கா’சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி

‘செக்ஸி துர்கா’சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி
Published on

துர்கா மட்டன் ஷாப், ஷிவா மட்டன் ஷாப் ஆகியவற்றால் உங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் ‘செக்ஸி துர்கா’என்றால் பிரச்னையா? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பினார்.

மலையாள இயக்கநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய படமான ‘செக்ஸி துர்கா’ கோவாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுதி மறுக்கப்பட்டிருந்தது. படத்தின் தலைப்பால் பெரும் சர்ச்சை எழுந்ததால் படத்தின் பெயரை Sxxx என்றும் மாற்றினர். ஆனால் இது போன்ற படங்கள் திரைப்பட விழாக்களில் பங்குபெற தடை விதிப்பதே சரி என்பது ஒரு சாராரின் கருத்தாகவும் இருந்தது. இந்த விஷயம் அந்த நேரத்தில் கடும் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், துர்கா மட்டன் ஷாப், ஷிவா மட்டன் ஷாப் ஆகியவற்றால் உங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் ‘செக்ஸி துர்கா’என வைத்தால் பிரச்னையா என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், செக்ஸி துர்கா என்பது ஒரு படம். படத்தின் கதைக்கேற்ப செக்ஸி துர்கா என இயக்குநர் தலைப்பிட்டிருக்கிறார். இதில் என்ன பிரச்னை இருக்கிறது..? படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் அதன் தலைப்பை கதைக்கேற்ப முடிவு செய்கிறார். இதனை எதிர்ப்பவர்கள் வகுப்புவாதத்தை வளர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com