\
உண்ணாவிரதம் இருந்தால்..: மாணவிகளுக்கு பாலியல் மிரட்டல்!

உண்ணாவிரதம் இருந்தால்..: மாணவிகளுக்கு பாலியல் மிரட்டல்!

உண்ணாவிரதம் இருந்தால்..: மாணவிகளுக்கு பாலியல் மிரட்டல்!
Published on: 

பள்ளியை தரம் உயர்த்தக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட மாணவிகள் கான்வாலியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் ஈவ்-டீசிங் கொடுமையால் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்த மாணவிகள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது அவர்களின் கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைபள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற போவதில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com