\
சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை
Published on

காரைக்காலில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட கீழ பொன்பேத்தி, சேவகன் பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் (50) பெயிண்டர் வேலை செய்து வரும் இவர், கடந்த 2020 அன்று அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பான புகாரை நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காரைக்கால் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அல்லி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதன்படி குற்றவாளியான பெயிண்டர் ஜெயராமனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றும் சிறுமிக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுவதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மொத்தம் 22 ஆண்டுகள் தண்டனை விதித்து ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்த குற்றத்திற்காக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது காரைக்கால் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com