பாலியல் புகார் எதிரொலி: ஹரியானா அமைச்சர் சந்திப் சிங் ராஜினாமா

பாலியல் புகார் எதிரொலி: ஹரியானா அமைச்சர் சந்திப் சிங் ராஜினாமா
பாலியல் புகார் எதிரொலி: ஹரியானா அமைச்சர் சந்திப் சிங்  ராஜினாமா

பாலியல் புகார் எழுந்த நிலையில் ஹரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சந்திப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இளநிலை தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் சண்டிகர் காவல் துறையில் கொடுத்துள்ள புகாரில் ஜூலை 1, 2022 அன்று, ஹரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் ஸ்னாப்சாட் செயலி மூலமாக தன்னை அழைத்து ஆவணங்களை சரி பார்ப்பதற்காக சண்டிகரில் செக்டார் 7ல் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் வரும் படி கூறியதாகவும் அவ்வாறு தான் சென்றபோது மாலை 6.50 மணியளவில், தனக்கு பாலியல் ரீதியாக தனக்கு துன்புறுத்தல் கொடுத்ததாகவும் ஒரு கட்டத்தில் அமைச்சரை தள்ளிவிட்டு வெளியே ஓடி தன்னுடைய காப்பாற்றிக் கொண்டதாகவும் அவர் தனது புகாரின் தெரிவித்தார். இப்புகாரின் அடிப்படையில் சந்திப் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் முழுமையான அறிக்கை வரும் வரை விளையாட்டு துறையை முதல்வரிடம் ஒப்படைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com