ஹரியானாவில் கொதிகலன் வெடித்ததில் பல தொழிளாளிகள் படுகாயம்; ஒருவர் கவலைக்கிடம்

ஹரியானா மாநிலம் ரேவாரியில் நேற்று மாலை கொதிகலன் வெடித்து சிதறியதில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
கொதிகலன் வெடிப்பு
கொதிகலன் வெடிப்புani

ஹரியானா மாநிலம் ரேவாரியில் நேற்று மாலை கொதிகலன் வெடித்து சிதறியதில் பல தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியில் இயங்கிவரும் லைஃப் லாண்ட் என்ற தொழிற்சாலையில் நேற்று மாலை கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில் சுமார் 40 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஒரு தொழிலாளி ஆபத்தான நிலமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக காயமடைந்த தொழிளாளர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்தது. விபத்து குறித்து, காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து குறித்து, சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com