கட்டுக்கடங்காத கூட்டம்; மருத்துவமனையில் ரசிகர்கள்; கிரிக்கெட் வீரர்களை வரவேற்கும் நிகழ்வில் விபரீதம்

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை வரவேற்பதற்காக கூடிய கூட்டத்தில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மும்பையில் கூடிய கூட்டம்
மும்பையில் கூடிய கூட்டம்pt web

இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வரவேற்பதற்காக மும்பை மரைன் டிரைவ் பகுதியில் நேற்று மாலை ஏராளமானோர் திரண்டனர்.

திரும்பும் திசையெங்கும் மக்கள் தலையே காட்சியளிக்க, வீரர்கள் வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மும்பையில் கூடிய கூட்டம்
டி20 உலகக்கோப்பை | வெற்றி பேரணியால் திக்குமுக்காடிய மும்பை... ரூ.125 கோடி பரிசுத்தொகை தந்த பிசிசிஐ!

இதனிடையே, கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. காயமடைந்த10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேரில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பதாகவும் மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் கூடிய மரைன் டிரைவ் பகுதியின் சாலையோரம், காலணிகள் குவிந்து கிடக்கும் காட்சியும் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com