பரவிய தவறான தகவல்... ஒரே நேரத்தில் டெல்லி எய்ம்ஸ்-ல் 7 தீயணைப்பு வாகனங்கள் குவிந்ததால் பரபரப்பு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தவறான தகவல் வந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ்
டெல்லி எய்ம்ஸ்முகநூல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தவறான தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக 7 வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் மருத்துவமணைக்கு சென்ற நிலையில் தகவல் தவறானது என தெரியவந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ்
டெல்லி எய்ம்ஸ்

நேற்று இரவு 9.28 மணிக்கு இந்த தகவல் வந்துள்ளது. நிகழ்விடத்துக்கு சென்று பார்த்த போது எல்.இ.டி. விளக்கில் இருந்து புகை வந்ததை பார்த்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ்
புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

தவறான தகவலை கேட்டு நிகழ்விடத்துக்கு டெல்லி காவல்துறையும் சென்றுள்ளது. தொலைபேசி மூலம் அழைத்த நபரை காவல்துறை இதுதொடர்பாக விசாரித்தனர். ஒரே நேரத்தில் 7 தீயணைப்பு வாகனங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com