காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் !

காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் !

காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் !
Published on

மக்களவையில் அநாகரிகமாக நடந்துக் கொண்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மக்களவை முடங்கிய நிலையில், இன்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, ராஜஸ்தானைச் சேர்ந்த லோக்தந்திரிக் கட்சியின் எம்.பி. ஹணுமான் பெனிவால், சோனியா காந்தியின் குடும்பம் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக சபாநாயகர் ரமாதேவி மீது சில காதிதங்களையும் வீசினர்.

இதனால் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை கூடியபோது, அவையில் அநாகரிகமாக நடந்துக்கொண்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரையும் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர்.உன்னிதன், பென்னி பெக்னன் ஆகியோரை நடப்பு மக்களவைத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டனர். இதற்கிடையில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com