அரியானா: துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜேஜேபி எம்.எல்.ஏ

அரியானா: துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜேஜேபி எம்.எல்.ஏ

அரியானா: துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜேஜேபி எம்.எல்.ஏ
Published on

அரியானாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்குமார் கவுதம் ராஜினாமா செய்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் பாஜகவுடன் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்ட போது, பாஜகவுக்கு ஜேஜேபி கட்சி ஆதரவு அளித்தது. அதற்காக அக்கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.

இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பதவியை அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ராம்குமார் கவுதம் ராஜினாமா செய்துள்ளார். தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் உதவி இல்லாமல் துணை முதல்வர் பதவி பெறவில்லை என்பதை துஷ்யந்த் சவுதாலா மறந்துவிடக் கூடாது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கட்சியில் நடப்பது எதுவும் சரியாகப்படவில்லை. கட்சி செயல்படும் விதம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com