\
சர்வர் கோளாறு: ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு

சர்வர் கோளாறு: ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு

சர்வர் கோளாறு: ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு
Published on

சர்வர் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா விமான சேவை உலகம் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

ஏர் இந்தியா விமான சேவைக்கான SITA சர்வரில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா மற்றும் வெளி நாடுகளில் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், டெல்லி, மும்பை உள்பட பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி சமூக வலைத்தளங்களிலும் பயணிகள் அதிருதியை தெரிவித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com