\
சீரம் நிறுவன சி.இ.ஓ.-வுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சீரம் நிறுவன சி.இ.ஓ.-வுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை

சீரம் நிறுவன சி.இ.ஓ.-வுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு நடவடிக்கை
Published on

சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவாலாவிற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது, சீரம் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆதர் பூனவாலா உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு 2 கமாண்டோக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆதர் பூனவாலா இந்தியாவில் எந்த இடத்தில் பயணித்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com