புதுச்சேரி: சின்னத்திரை நட்சத்திரங்கள் சாதனை முயற்சி – என்ன செய்தார்கள் அப்படி?

புதுச்சேரி: சின்னத்திரை நட்சத்திரங்கள் சாதனை முயற்சி – என்ன செய்தார்கள் அப்படி?
புதுச்சேரி: சின்னத்திரை நட்சத்திரங்கள் சாதனை முயற்சி – என்ன செய்தார்கள் அப்படி?

புதுச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தையொட்டி, சின்னத்திரை நட்சத்திரங்கள் சார்பில் 75 படகுகளில் கடலில் குப்பைகள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நெகிழி இல்லா புதுச்சேரியை உருவாக்கும் நோக்கத்தோடு சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், நெகிழி கழிவுகளை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து 75 படகுகளில் கடலுக்குள் சென்ற 75 சின்னத்திரை நட்சத்திரங்கள், 75 தேசியக் கொடிகளை கையில் ஏந்தியபடி 75 நிமிடங்கள் கடலில் பயணம் செய்து கடலில் உள்ள நெகிழி கழிவுகளை அகற்றி சாதனை படைத்தனர்.

இவர்களின் இந்த முயற்சி விர்ச்சு புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com