HEADLINES | ’தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவு’ முதல் ’ஜிம்பாப்வேவிடம் இலங்கை தோல்வி’ வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தலைப்பு செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
நாடு முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்.. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் செப். 10-ல் தலைமை தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை..
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை.. புறநகர் பகுதிகளிலும் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய மழை..
சிவகங்கை, கரூர், ஆரணி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல சேலம், தேனி பகுதிகளில் பெய்த மழையால் குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.. இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு..
மழை, வெள்ளம், நிலச்சரிவால் தடுமாறும் வட இந்திய மாநிலங்கள்... ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீட்பு பணிகளில் களமிறங்கியது இந்திய விமானப் படை..
டெல்லி யமுனா ஆற்றில் தொடர்ந்து அபாய அளவில் பாயும் வெள்ளம்.. கரையோரப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைப்பு... பொது போக்குவரத்தும் பாதிப்பு..
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு... மலையின் பெரும்பகுதி சரிந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான நட்புறவு எப்போதுமே ஸ்பெஷலானது எனும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு... இரு தலைவர்களின் அடுத்தடுத்த கருத்துகளால் இந்திய, அமெரிக்க உறவில் புதிய திருப்பம்..
ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் 15 ஆயிரத்து 516கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்... 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் உறுதி..
சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றுகிறது திமுக... மக்களை கவனிக்காமல் முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் பழனிசாமி விமர்சனம்....
அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்கள் கெடு விதித்த நிலையில் நடவடிக்கை..
அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கண்டனம்.. செங்கோட்டையனின் நீக்கம் கட்சிக்கு உகந்ததல்ல என வி.கே.சசிகலா கருத்து..
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதி அதிமுக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா... கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக நடவடிக்கை...
கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது... பன்னீர்செல்வம், தினகரன் இருவரிடமும் சமரசம் பேச தயாராக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி...
திருச்சியில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை திட்டத்தை மாற்ற காவல் துறை அறிவுறுத்தல்.... அனுமதி மறுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வேறு பகுதிகளை தேர்வு செய்ய தவெகவினருக்கு ஆலோசனை....
விஜயின் சுற்றுப்பயணத்தை தடுக்க திமுக அரசு முயற்சி... காவல் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு....
7 ஆண்டுகளுக்குப் பிறகு வானியல் அதிசயங்களில் ஒன்றான, நீளமான சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது... இரவு 11 மணிக்கு முழுமையான சந்திர கிரகணத்தை காணலாம் என வானியல் நிபுணர்கள் தகவல்...
பாரமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வரும் 9ஆம் தேதிமுதல் அடுத்தமாதம் 19ஆம் தேதிவரை, 7 நிமிடங்களுக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு....
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 80 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி, அவ்வணிக்கு எதிராக மிகக்குறைவான டி20 டோட்டலை பதிவுசெய்து தோல்வி.
2025 ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை தோற்கடித்த இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் ஜப்பானுடன் சமன் செய்தது இந்தியா மகளிர் அணி, கடைசி நிமிடத்தில் நவ்நீத் கவுர் அடித்த கோலால் சமன் செய்தது இந்தியா. அடுத்த ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாடுகிறது.