HEADLINES |7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் மத்திய அமைச்சரின் உறுதி வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் கச்சா எண்ணெய் தொடர்பாக மத்திய அமைச்சரின் உறுதி வரை விவரிக்கிறது.
செங்கோட்டையனின் பேச்சால், தேனி மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.
தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பத்ரிநாத், கேதர்நாத் உட்பட 4 ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்லும் சார் தாம் யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
’’ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும்’’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
பேடோங்டன் ஷினவத்ரா நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட நிலையில், தாய்லாந்தின் புதிய பிரதமராக தொழில் அதிபர் அனுடின் சார்ன்விராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவை எதிர்த்து போரிட 26 நாடுகள் தயாராக உள்ளதாக பிரான்ஸ் அதிபர் பேசியிருந்த நிலையில், புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பாடல் எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்.
காஸா மீதான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நோபல் பரிசு பெற்ற 14 பேர் உட்பட 4,000 விஞ்ஞானிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில், 5ஆவது ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடம் பிடித்துள்ளது.