september 23 2025 morning headlines news
rain, vijayx page

HEADLINES |அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு முதல் விஜய் பயணத்தில் மாற்றம் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு முதல் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம் வரை விவரிக்கிறது.
Published on

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு முதல் விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம் வரை விவரிக்கிறது.

  • தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் செப். 26, 27ஆம் தேதிகளில் கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம். அடுத்த மாதம் 4ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • இண்டிகோ விமான நிறுவனத்தின் மோசமான சேவை குறித்து தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா புகார் தெரிவித்துள்ளார்.

  • ஆதித்யா எல்-1 இதுவரை 13 டெரா பைட் அளவுக்கான அறிவியல் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

september 23 2025 morning headlines news
விஜய்புதிய தலைமுறை
  • நடிகர் ரன்பீர் கபூர் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல் துறையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீட்டித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d' Or விருதை பிரான்ஸ் வீரர் டெம்பிலே வென்றார்.

  • செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

  • நேபாளத்தைத் தொடர்ந்து பெருவிலும் அரசுக்கு எதிராக GEN Z இளைஞர்களின் போராட்டம் வெடித்தது.

september 23 2025 morning headlines news
கிராண்ட் சுவிஸ் தொடர் |தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்.. முதல்வர், பிரதமர் வாழ்த்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com