தமிழகத்தில் மழை - இலங்கையை வீழ்த்திய வங்கதேசம்
தமிழகத்தில் மழை - இலங்கையை வீழ்த்திய வங்கதேசம்web

HEADLINES | 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை முதல் இலங்கையை தோற்கடித்த வங்கதேசம் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, 6 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு முதல் ஆசியக்கோப்பை போட்டியில் இலங்கையை தோற்கடித்த வங்கதேசம் வரை விவரிக்கிறது.
Published on

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான தலைப்பு செய்திகளை இங்கே பார்க்கலாம்..

  • தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு... சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு..

  • அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு..11.19 சதவிகித பொருளாதார வளர்ச்சியே திராவிட மாடலுக்கு சாட்சி என முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • திமுகவின் கோட்டையான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய்.. ஆர்ப்பரித்த தொண்டர்கள் மத்தியில் உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டுப் பேச்சு..

  • சொந்த மாவட்டத்தையே கருவாடுபோல காயவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என விஜய் குற்றச்சாட்டு... நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் ஏன் என்றும் கேள்வி..

  • பரப்புரையில் விஜய் கூறிய சில குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு.. கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என விஜய் பேசியது தவறான தகவல் என்றும் விளக்கம்..

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
  • H1B விசாக்களுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் கட்டண விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. புதிய நடைமுறையால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிக்கல்..

  • H-1B விசா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு.. விசா விதிமுறைகள் குறித்து அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட தயார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்..

  • H1B விசா கட்டண உயர்வு எதிரொலி... வெளிநாட்டில் உள்ள ஊழியர்களை அமெரிக்காவுக்கு திரும்பும்படி அறிவுறுத்தும் முன்னணி நிறுவனங்கள்..

  • புதியதாக விசா கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா கட்டண உயர்வு பொருந்தும்.. ஏற்கெனவே ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்களுக்கு புதிய நடைமுறை பொருந்தாது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல்..

  • இந்திய பிரதமர் மோடி பலவீனமானவர்.... H1B விசா கட்டண உயர்வை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..

donald trump slaps $100,000 fee on H1B visas
ட்ரம்ப்எக்ஸ் தளம்
  • இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க சுய சார்புதான் ஒரே மருந்து... குஜராத்தில் 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு..

  • நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கியது தேர்தல் ஆணையம்.. தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாததால் நடவடிக்கை..

  • பெங்களூரு - சென்னை வந்தே பாரத் ரயில் என்ஜினில் கோளாறு... ஜோலார்பேட்டை அருகே 3 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி..

  • மலையாள நடிகர் மோகன்லாலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு.. திரைத் துறையில் உயரிய விருதை அறிவித்தது மத்திய அரசு...

  • தனுஷின் இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியானது... வரும் 1ஆம்தேதி படம் வெளியாகும் நிலையில் முன்னோட்டத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு....

இந்தியாவிற்கு எதிராக ODI தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி
இந்தியாவிற்கு எதிராக ODI தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணிcricinfo
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி... 50 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா, தொடர் நாயகியாக தேர்வு..

  • ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இலங்கையை தோற்கடித்து வங்கதேச அணி அசத்தல் வெற்றி..

  • ஏமனில் ஊடக அலுவலகங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிரிழந்த துயரம்..

  • ஆசியக்கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி... சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com