\
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை !

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை !

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை !
Published on

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை விரட்ட காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக  காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தி இந்த பொறுப்பினை வழங்கினார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பணிகளை பிப்ரவரியில் இருந்து பிரியங்கா காந்தி கவனித்து வருகிறார்.

உ.பி மட்டுமில்லாமல் மற்ற மாநில அரசியல்களிலும் வரும் காலங்களில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரியங்கா காந்திக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com