#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்

#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்
#MeToo புகார்களை கூற மகளிர் ஆணையம் தனி இ-மெயில்

பாலியல் புகார்களைக் கூற டெல்லி மகளிர் ஆணையம் தனி இ-மெயில் முகவரியை அறிவித்துள்ளது. 

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். . 

இதனைதொடர்ந்து #MeToo என்ற பிரச்சாரத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.  திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். இதனால் சட்ட ஆணையம் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில் #MeToo இயக்கத்தின் வாயிலாக பாலியல் புகார்கள் தெரிவிக்க டெல்லி மகளிர் ஆணையம், தனி முகவரி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு டெல்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் மற்றும் பெண்கள் ஆணையத்திடம் புகார்களை தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார்கள் குற்றவாளிகளை சிறையில் அடைக்க உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‌#MeToo பாலியல் புகார்களை கூற metoodcw@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். மேலும் 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com