மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி : பங்குச் சந்தைகளில் சரிவு
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை வாசித்தார். இதில் பல்வேறு நிதி ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
பட்ஜெட் வாசிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 680 புள்ளிகள் சரிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு நிப்டி 11,800 ஆக குறைந்தது. பட்ஜெட் வாசிப்புக்கு பின்னர் பங்குச் சந்தைகள், சரிவில் இருந்து சற்றே ஏற்றம் கண்டது.
பட்ஜெட் அறிவிப்புகளானது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அமையாததால், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

