காங்கிரஸ் கட்சிக்கு உரிய தலைமை இல்லை - கபில் சிபல் விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு உரிய தலைமை இல்லை - கபில் சிபல் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்கு உரிய தலைமை இல்லை - கபில் சிபல் விமர்சனம்
காங்கிரஸ் கட்சிக்கு உரிய தலைமை இல்லை என அந்த கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தை அடுத்து, கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். மேலும், கட்சி செயல்பாடுகளிலும் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். எனினும், அவர்களை சமாதானப்படுத்த கட்சி தரப்பில் இதுவரை எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின் இந்த விவகாரம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் மீண்டும் மனம் திறந்துள்ளார். அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு மாறுவோர் நாங்கள் அல்ல என்றும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர்களே, அவர்களை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எப்போதும் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டோம் எனக் கூறிய அவர், காங்கிரஸ் காரிய கமிட்டியை கூட்டும்படி மூத்த தலைவர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பதாகவும், காரிய கமிட்டி கூடினால்தான் நாங்கள் ஏன் இப்படி இருக்கிறோம் என்பதை தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com