காங். தலைவர் தேர்தல்: 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் சசிதரூர் - வாய்ப்பு எப்படி?

காங். தலைவர் தேர்தல்: 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் சசிதரூர் - வாய்ப்பு எப்படி?
காங். தலைவர் தேர்தல்: 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் சசிதரூர் - வாய்ப்பு எப்படி?

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் வருகிற 30-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி, புதிய தலைமுறையை தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் இந்தத் தேர்தலில் ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக அறியப்படும் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் போட்டியிடுகிறார்.

அசோக் கெலாட் வருகிற 27-ம் தேதி (நாளை மறுநாள்) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிதரூரும் தனது வேட்பு மனுவை வருகிற 30-ம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரது ஆதரவையும் சசிதரூர் தற்பொழுது முதலே கோரி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தத் தேர்தலில் அசோக் கெலாட்டுக்கே தற்போது ஆதரவு பெருகிவரும் நிலையில் வேறு யாராவது போட்டியிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com