இந்தியா
'சிறந்த படைப்புகளை அனுப்புக!' - யுவ புரஷ்கார் விருதுக்கு அழைப்பு
'சிறந்த படைப்புகளை அனுப்புக!' - யுவ புரஷ்கார் விருதுக்கு அழைப்பு
யுவ புரஷ்கார் விருதுக்கான சிறந்த படைப்புகளை அனுப்புமாறு சாகித்ய அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.
இளைய தலைமுறை படைப்பாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் யுவ புரஷ்கார் என்ற பெயரில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, மலையாளம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு விருதுடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்காக படைப்புகளை அனுப்புமாறு சாகித்ய அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.பாலபாரதிக்கு விருது வழங்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.