மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில்வே நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண சடலங்களுக்கு எண் நிர்ணயித்த மருத்துவரை கொலைவெறியுடன் தாக்கிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் ரயில்வே மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சடலங்களை உடற்கூறு பரிசோதனை செய்த கிங் எட்வர்டு மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் ஹரிஷ் பதக், உறவினர்கள் எளிதாக அடையாளம் காணுவதற்காக சடலங்களில் தலையில் எண் எழுதி வைக்கும்படி தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை தாக்கி அவரது தலையில் எண் எழுதிவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவர் ஹரிஷ் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

