செல்ஃபி விபரீதம்: அதிகரிக்கும் உயிர் பலிகள்!

செல்ஃபி விபரீதம்: அதிகரிக்கும் உயிர் பலிகள்!
செல்ஃபி விபரீதம்: அதிகரிக்கும் உயிர் பலிகள்!

இளைஞர்களிடையே செல்ஃபி ஆசை அதிகரித்து வருகிறது. நண்பர்கள், தோழிகளுடன் வித்தியாசமாக செல்ஃபி எடுப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம். இந்த பிரியம் ஆபத்தில் முடிவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது மும்பையில்.

மும்பை பாந்த்ரா கடற்கரையில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 6 பேர் செல்ஃபியால் பலியாகியுள்ளனர். மே மாதம் 9-ம் தேதி தோழிகளுடன் பாந்த்ரா கடற்கரை வந்தார், 18 வயது கல்லூரி மாணவி தரன்னும் அன்சாரி. கரையில் அலைகள் மோதும் ஆக்ரோஷ காட்சிகளுடன் செல்ஃபி எடுக்க நினைத்தார். எடுத்துக்கொண்டிருக்கும்போது தன்னையறியாமல் பாறையின் நுனிக்குச் சென்றுவிட, தடுமாறி விழுந்தார். அலை கொடூர கரங்களால் இழுத்துச் சென்றது. அங்கு நின்ற ரமேஷ் வாலுஞ் என்பவர் பதறியடித்து தரன்னும் அன்சாரியை காப்பாற்றக் குதித்தார். உயிர்ப் பசி கொண்ட பேரலை அவரையும் இழுத்துச் சென்றது. மே 15-ம் தேதி மதுரையை சேர்ந்த மீனாட்சி என்பவர் தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் பெற்றோருடன் சுற்றுலா சென்றார் மும்பைக்கு. அதே போல கடற்கரையில் நின்று செல்ஃபி எடுத்தார் அம்மாவுடன். தடுமாறி விழுந்ததில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார் பிறகு. பிரித்தி என்பவரும் செல்ஃபி எடுக்கும்போது தவறிவிழுந்து பலியானார் இதே பகுதியில். 

செல்ஃபி பலிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அதன் சீரியஸ்தன்மை புரியாமல் இன்னும் அதே பகுதியில் செல்ஃபி மோகத்திலேயே குறியாக இருக்கிறார்கள் இளைஞர்களும் இளைஞிகளும்.

‘அவங்களுக்கெல்லாம் நான் சொல்றது இதுதான். நீங்க உயிரோட இருந்தா ஆயிரம் போட்டோ எடுக்கலாம். அதுக்கான காலமும் நேரமும் அதிகமா இருக்கு. செல்ஃபிங்கற பேர்ல உங்க வாழ்க்கையோட விளையாடாதீங்க. பெற்றோர் படற வேதனை எங்களுக்கு மட்டும்தான் தெரியும்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணா. இவர், செல்ஃபியால் பலியான பிரித்தியின் அப்பா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com