"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்" வருமான வரித்துறை

"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்" வருமான வரித்துறை

"சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடி வியாபாரத்தில் வந்ததுதான்" வருமான வரித்துறை
Published on

தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33.89 கோடிக்கான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அவரின் மணல் குவாரி வியாபாரத்தில் இருந்தே வந்ததாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டன. அந்த நிலையில், டிசம்பர் 8 2016ம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.33.89 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு குறுகிய காலத்துக்குள் ரெட்டிக்கு கோடிக்கணக்கில் ரூ.2ஆயிரம் நோட்டுகள்  கிடைத்தது எப்படி என சிபிஐ சந்தேகம் எழுப்பினர். இது குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த ரெட்டி, ஒரே குற்றச்சாட்டுக்காக பல வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்றும், இரண்டு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 2 வழக்குகளை ரத்து செய்தது.

இந்நிலையில் கைப்பற்ற பணம் ரெட்டிக்கு சொந்தமான மணல் குவாரி வியாபாரம் மூலம் வந்த பணம் என்றும் அந்த பணத்தில் முறைகேடு ஏதும் இல்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள சேகர் ரெட்டி ''ரெய்டுக்கு முன்னதாகவே நாங்கள் சரியான வரியை செலுத்தி இருந்தோம். வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் சரியான ஆவணங்களை வைத்திருந்தோம். எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால், உண்மை நிலை அறியாமலே திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியது தான்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com