பிரதமர் மோடி வருகை: குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகை: குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகை: குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு
Published on

குருவாயூர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்த வருவதை அடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார். இதற்காக அவர் கொச்சி வந்தடைந் தார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் வரவேற் றனர். 

கொச்சியில் இருந்து திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். அவர் எடைக்கு எடை தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப் பூக்கள் அங்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதை முடித்த பின்னர் கேரளாவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் உரை யாற்றுவார் என கூறப்படுகிறது.

குருவாயூர் கோயிலில் வழிபாட்டை முடித்த பின்னர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ண மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக கேரள மாநில பாஜக தலைமை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிரதமர் வருகையையொட்டி, குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com