நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?

நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?

நீதிபதி மனைவியை காவலர் சுட்டுக்கொன்றது ஏன்?
Published on

நீதிபதி மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கியால் சுட்டது ஏன் என்று கைது செய்யப்பட்ட காவலர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த் ஷர்மா. இவரது மனைவி ரீத்து (38) மற்றும் மகன் துருவ். நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு காவலராக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து மற்றும் துருவ் நேற்று மளிகை சாமான்கள் வாங்க மார்க்கெட்டிற்கு சென்றிருக் கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக மஹிபால் சிங் சென்றிருக்கிறார். 

அனைத்து பொருட்களையும் வாங்கிய பின் வீடு திரும்பியபோது திடீரென்று மஹிபால் சிங், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள அந்தப் பகுதியில் வைத்து தனது துப்பாக்கியால் ரீத்துவைச் சுட்டுள்ளார். பின்னர் அவர்கள் மகன் துருவையும் சுட்டுள்ளார் மஹிபால். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் மஹிபால் சிங், நீதிபதியின் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதை நீதிபதிக்கு போன் செய்து சொன்ன மஹிபாலை இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துருவின் உடல்நிலை யும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

(ரீத்து)

இதனிடையே நீதிபதியின் மனைவி மற்றும் மகனைச் சுட்டுக்கொன்றது ஏன் என்பது பற்றி போலீசாரிடம் மஹிபால் சிங் தெரிவித்துள்ளார். கார் சாவியை கேட்டதற்காக சுட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட சிங் பின், ‘நீதிபதியின் மகனும் மனைவியும் பேய்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் அவர்கள் அந்தளவுக்கு மோசமானவர்கள். அவர்கள் வீட்டு நாயின் கழிவுகளை என்னை சுத்தம் செய்ய சொல்வார்கள். அவர்கள் போலீசையும் நாயையும் ஒன்றாகவே மதிப்பார்கள்’ என்று தெரிவித்ததாக போலீசார் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிங் அவரது அம்மா, இரண்டு மகள்கள், மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் மனைவி கவிஞர். அவர் எழுதிய சில பாடல்கள் யுடியூப்பில் பிரபலமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

அவர் கூறியதாக போலீசார் கொடுத்த துன்புறுத்தல் காரணமாக அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் மஹி பால் சிங் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மஹிபால் சிங்கின் மனைவி ஆசிரியர் ஆவார். இவர்களுக்கு இரண்டு குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com