இந்தியா
பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு -உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு -உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, சாலை மறியல் போராட்டம் காரணமாக மேம்பாலம் ஒன்றில் காத்திருக்க நேரிட்டது. இதனால் தனது பயணத்தை அவர் பாதியிலேயே முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மணிந்தர் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.