மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய்: யோகி ஆதித்யநாத்

மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய்: யோகி ஆதித்யநாத்

மதச்சார்பின்மை என்ற வார்த்தை மிகப்பெரிய பொய்: யோகி ஆதித்யநாத்
Published on

மதச்சார்பின்மை என்ற வார்த்தையே மிகப்பெரிய பொய் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற வார்த்தை, இந்தியா விடுதலை பெற்றதற்கு பிறகுதான் உருவானது என்றும், அந்த வார்த்தையை
உருவாக்கியவர்களும், மக்களுக்கு பழக்கப்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யோகி கூறினார். சட்டிஸ்கர்
மாநிலம் ராய்பூரில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், மதச்சார்பின்மை என்ற ஒன்று இல்லவே இல்லை.
அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் முறைமை மட்டுமே சரியானது; மதச்சார்பின்மை என்பது தவறான கொள்கை
என்றார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட, பல்வேறு சமூகங்களை
உள்ளடக்கிய, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யோகியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியினர்
கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், “யோகி ஆதித்யநாத்
மதச்சார்பின்மையை பொய் என்றும், மோடி அரசை ராம ராஜ்ஜியத்துடனும் ஒப்பிடுகிறார். இது கடுமையான
கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com