மாற்றி அமைக்கப்படவிருக்கும் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியை மக்களவை துணை சபாநாயகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியதால், இதுபற்றிய செய்திகள் டெல்லியில் அதிக அளவில் உலா வருகின்றன. தம்பிதுரையும், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபாலும் அமைச்சரவையில் இடம்பெறக் கூடும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அதிமுக வட்டாரங்களில் இந்த செய்திகள் உறுதிசெய்யப்படவில்லை. இதுதவிர சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.