‘நியமன உறுப்பினர்களுக்கு இருக்கை’: புதுச்சேரி அரசுக்கு பாஜக எச்சரிக்கை!

‘நியமன உறுப்பினர்களுக்கு இருக்கை’: புதுச்சேரி அரசுக்கு பாஜக எச்சரிக்கை!

‘நியமன உறுப்பினர்களுக்கு இருக்கை’: புதுச்சேரி அரசுக்கு பாஜக எச்சரிக்கை!
Published on

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 3 பேருக்கும் இன்னும் 15 நாட்களுக்குள் இருக்கை ஒதுக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பாஜகவை சேர்ந்த 3 பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த 4 ஆம் தேதி எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் இவர்களுக்கு இதுவரை அவையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு புதுச்சேரி பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இன்னும் 15 தினங்களில் 3 நியமன உறுப்பினர்களுக்கும் பேரவையில் இடம் ஒதுக்காவிட்டால் ஆட்சியாளர்களின் இருக்கை இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com