பிப்ரவரி மாதத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் - வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை

பிப்ரவரி மாதத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் - வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை
பிப்ரவரி மாதத்திலேயே மண்டையை பிளக்கும் வெயில் - வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பொதுவாக மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் முதமுறையாக  பிப்ரவரியில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

குஜராத்தில் உள்ள கட்ச் மற்றும் கோவாவில் உள்ள கொங்கன் பகுதிகளில் அதிகபட்சமாக 37 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியது.

ஞாயிற்றுக்கிழமையன்று, குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9 டிகிரி அதிகமாகும். அதேபோல் நலியா பகுதியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 6 டிகிரி அதிகம். ராஜ்கோட்டில்  39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9  டிகிரி அதிகம். அகமதாபாத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 7 டிகிரி அதிகம். மும்பையில்  36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகம். கோவாவில் 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குருகிராமில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. குளிர் பிரதேசமான  சிம்லாவில் 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 11 டிகிரி அதிகமாகும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச சராசரி வெப்பநிலையை நாடு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com