சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - விஞ்ஞானி நம்பி நாராயணன் வரவேற்பு

சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - விஞ்ஞானி நம்பி நாராயணன் வரவேற்பு

சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - விஞ்ஞானி நம்பி நாராயணன் வரவேற்பு
Published on

விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டது. நம்பி நாராயணனை கைது செய்து தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து உச்சநீதிமன்றம் அமைத்த குழு அண்மையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் , இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உத்தரவுபிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அதனை வரவேற்றுள்ளார் நம்பி நாராயணன்.

"எந்த தவறும் செய்யாத நான் எல்லா விதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளானேன். இந்த வழக்கில் சதி நடந்ததா என்பது உள்ளிட்ட அனைத்து உண்மைகளையும் சிபிஐ விசாரித்து வெளி கொண்டு வருமாறு உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள புதிய உத்தரவை நான் வரவேற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

இவரது வாழ்க்கை கதையை நடிகர் மாதவன் Rocketry: The Nambi Effect என்ற படத்தில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com