\
1-8ஆம் வகுப்புகள் நவ.8 ஆம் தேதி திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு

1-8ஆம் வகுப்புகள் நவ.8 ஆம் தேதி திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு

1-8ஆம் வகுப்புகள் நவ.8 ஆம் தேதி திறப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு
Published on

புதுச்சேரியில் 1-8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் நவம்பர் முதல் தொடக்கப்பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் 1-8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சியவாயம் தெரிவித்துள்ளார்.
வருகைப் பதிவேடு கிடையாது. ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் எனவும், கொரோனா முன்னெச்சரிக்கையாக மதிய உணவு தற்காலிகமாக வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com