’திருமணம் செய்ய ஒரு மணப்பெண்ணை ஏற்பாடு செய்யுங்கள்’ - தேர்தல் அலுவலருக்கு ஆசிரியர் அனுப்பிய கடிதம்!

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராதது ஏன்? என்று காரணம் கேட்ட ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அவ்வாசிரியர் அளித்த பதில் கடிதமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம்முகநூல்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வராதது ஏன்? என்று காரணம் கேட்டு ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அவ்வாசிரியர் அளித்த பதில் கடிதமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 3 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா என்னும் பகுதியில் அமைந்துள்ள மஹுதர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருபவர் 35 வயது நிரம்பிய அகிலேஷ் குமார் மிஸ்ரா. போபாலில் இருந்து சுமார் 450 கி.மீ தொலைவில் இப்பள்ளியானது அமைந்துள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், டிசம்பர் 3 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விரைவில் சட்ட சபை தேர்தல் நடக்கவிருப்பதால் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பானது அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் சகல ஆசிரியர்களுக்கும் நடத்த மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம்முகநூல்

இப்பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்ட நிலையில், அப்பள்ளியின் சமஸ்கிருத ஆசிரியர் அகிலேஷ் கலந்து கொள்ளவில்லை. எனவே அக்டோபர் 27 ஆம் தேதி அன்று பயிற்சி வகுப்புக்கு ஆசிரியர் வராதது ஏன் என்ற காரணமானது கேட்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அக்டோபர் 31 ஆம் தேதி ‘பாயிண்ட் டூ பாயிண்ட் ரிப்ளே’ என்ற தலைப்பில் அதற்கு பதில் கடிதம் ஒன்றியினை எழுதி அனுப்பியுள்ளார் அகிலேஷ் .

மத்திய பிரதேசம்
“INDIA கூட்டணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” - பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ எனக்கு முதலில் திருமணம் செய்து கொள்ள ஒரு மணப்பெண்னை ஏற்பாடு செய்யுங்கள். என் இரவுகள் முழுவதையும் எனக்கென ஒரு துணை இல்லாமல் வீணாகத்தான் செலவிடுகிறேன். எனவே 3.5 லட்சம் வரதட்சணையாக வேண்டும். இத்தொகையானது பணமாகவோ அல்லது வங்கி கணக்கிலோ கொடுத்தால் நலம். மேலும் சம்தாரியாவில் அல்லது சிங்ரௌலி டவர் பகுதியிலோ ஒரு லோன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பும் எனக்கு கொடுக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார்.

அக்கடிதத்தை படித்த சத்னா கலெக்டர் அனுராக் ஷர்மா இதனை பொருட்படுத்தாமல் நவம்பர் 2 ஆம் தேதியே அவரை பணியிடை நீக்கம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com