உடற்பயிற்சி ஆசிரியரின் தகாத செயல் ! அதிர்ச்சியடைந்த மாணவிகள்
ஐதராபாதின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று டிடி காலனி. இந்தப் பகுதியில்தான் மிகப் பிரபலமான சைதன்யா பள்ளியும் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பவர் ரமேஷ். இவருக்கு அந்தப் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் நல்ல பெயர் இருந்து வந்துள்ளது. ஆனால் நேற்று ரமேஷின் பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் ஒரு செய்தி பள்ளிக்கு வந்து சேர்ந்தது.
சைதன்யா பள்ளியை ஏராளமான பெற்றோர்களும், மாணவ அமைப்பினரும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரை அழைத்து பேசினர். அப்போதுதான் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளியே வந்தது. அதாவது பள்ளியில் நற்பெயர் எடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை ரமேஷ் ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
மேலும், அந்தப் படத்தை மாணவிகளிடம் காட்டி தனது பாலியல் ஆசைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகளை ரமேஷ் மிரட்டியுள்ளார். அதாவது தான் சொல்வதை செய்யவில்லை என்றால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார். ரமேஷ் இத்துடன் நிற்கவில்லை. இந்த இரண்டு மாணவிகளை தவிர பல மாணவிகளிடம் இதுபோன்று நடந்துள்ளார்.
மேலும் ஆபாசப் படங்களை மாணவிகளுக்கு தன் செல்போனில் காட்டியுள்ளார். இதனை பேச்சுவாக்கில் ஒவ்வொரு மாணவியையும் அறிந்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷின் இந்தச் செய்கை குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறினர். இதனைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவர் அமைப்புகளிடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதனையடுத்து நேற்று டிடி காலனி போலீஸார் உடற்பயிற்சி ஆசிரியர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.