\
சிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை!

சிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை!

சிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை!
Published on

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த பிரின்சிபல், அவர்கள் கண்முன்னேயே கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

பெங்களூரு அக்ரஹாரா தாசரஹள்ளியில், ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் எனும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின்  பிரின் சிபல் ரங்கநாத் (60). இவர் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுமார் 20 பேருக்கு சிறப்பு வகுப்பு  எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தி யால் ரங்கநாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரி ழந்தார். அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரங்கநாத்தின் உடலை கைப் பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் ரங்கநாத் நிலப்பிரச்சினை காரணமாக கொல்லப்பட்டதும் பிரசாத், ஸ்ரீனிவாஸ், முனிராஜ் என்ற பப்ளி, மகேஷ் ஆகியோர் இந்த கொலையை செய்ததும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை பிடிக்க தீவிரமாக களமி றங்கினர்.

இந்த நிலையில், இந்தக் கொலையில் தேடப்பட்ட முனிராஜ் என்ற பப்ளி, மகாலட்சுமி லே-அவுட் என்ற இடத்தின் அருகே பதுங்கி இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேம்ந்த குமார், போலீஸ்காரரக்ள் ஸ்ரீனிவாஸ், நவீன் அங்கு சென்றனர். அப்போது அவர் போலீசாரை முனிராஜ் தாக்கினார். இதில் ஸ்ரீனிவாஸ், நவீன் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேம்ந்த குமார், துப்பாக்கியால் சுட்டார்.

(முனிராஜ்)

இதில் முனிராஜின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com