'பாதிரியாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' திடுக்கிடும் திருப்பம் தந்த சிறுமி
கேரளாவில் கண்ணூர் அருகே உள்ள கொட்டியூரில் செயின்ட் செபஸ்டியன் சர்ச்சில் பாதிரியராக பணி புரிந்தவர் ராபின் வடக்குஞ்சேரி. 48 வயதான இந்த பாதிரியார் 16 வயதேயான சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது பணிப்புரிந்த ராபின் வடக்குன்செரில்(48) என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இரண்டு வாரங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.
இதில் சிறுமி கருவுற்று கர்ப்பபமானார். இதையடுத்து அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் பாதிரியாரின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த 2017 பிப்ரவரி 7 ஆம் தேதி சிறுமிக்கு மருத்துவமனையில் வைத்து குழந்தை பிறந்தது. அதன்பின் சிறுமியை வயநாட்டில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தகவல் கண்ணூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரிக்கு சிக்கல்கள் வரத் தொடங்கின. குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியை கண்டுபிடித்து விசாரித்தனர். இதில் பாதிரியார் தன்னை அடிக்கடி சர்ச்சுக்கு வர வழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இது தொடர்பாக கொட்டியூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். இதனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கினர்.
சிறுமியிடம் முதல் கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கினர். அப்போது சிறுமி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் "பாதிரியார் என்னிடம் மிரட்டியும் பல ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி சர்ச்சுக்கு வர வைப்பார். பின்பு, அங்கேயே என்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார்" என ஒப்புதல் அளித்தார். இந்தப் புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை மறைத்த மருத்துவமனை டாக்டர் பெட்டி, கன்னியாஸ்திரிகள் அனீட்டியா, ஒபிலியா, மரியா மற்றும் மருத்துவமனை ஊழியர் தங்கம்மா, இன்னொரு பாதிரியார் தாமஸ்ஜோசப் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவில் நடைபெறும் பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிறந்த குழந்தையின் டி.என்.ஏ.வை சோதனை செய்ததில் பாதிரியாரின் குழந்தைதான் என உறுதிச் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலசேரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி, ‘நானும் பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரியும் பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவில் ஈடுபட்டோம். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எனது குழந்தைக்கு அவர்தான் தந்தை, பாதிரியார் ராபினை திருமணம் செய்து வாழ விரும்புகிறேன். பாதிரியார் என்னை உறவுக் கொண்டமோது நான் மைனரல்ல' என தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
போலீஸார் விசாரணையின் போது பாலியல் வன்கொடுமை என சொன்ன சிறுமி, நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியது ஏன் என பல்வேறு தரப்பினரும் குழம்பினர். இதையடுத்து சிறுமியை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் கூறப்பட்டதால் பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரி கடந்த ஒரு ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.