கழிவுநீர் அகற்றும் பணியில் இவ்வளவு உயிரிழப்பா?: தமிழகம் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்
கழிவுநீர் அகற்றும் பணியில் நச்சுவாயு தாக்கி உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பின் போது உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு இந்தியா முழுவதும் கழிவு நீர் சுத்திகரிப்பின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 59 பேரும் உத்திரப் பிரதேசத்தில் 52 பேரும், பஞ்சாபில் 32 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எந்தவித விழிப்புணர்வு திட்டங்களும் தற்போது வரை உருவாக்கப்படவில்லை எனவும் மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.