“இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் பெற முடியும்” உச்சநீதிமன்றம்

விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் பெற முடியும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற தெலங்கானா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முகமது அப்துல் சமர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

விவாகரத்து செய்த இஸ்லாமிய பெண்கள், குற்றவியல் நடைமுறை சட்டம், பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் கோர முடியாது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார். அதனைக் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 இன் கீழ் ஜீவனாம்சம் பெறுவதை, இஸ்லாமிய பெண்கள் விவாகரத்து உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை என தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றம்
அசாம் | வெள்ளப்பெருக்கால் உயிரிழந்து வரும் அரியவகை உயிரினங்கள்!

முன்னாள் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவது விவாகரத்தான அனைத்துப் பெண்களின் உரிமை எனவும், விவாகரத்து செய்த மனைவிக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com