இந்தியா
வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவு தற்காலிக நிறுத்தம்
வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றும் உத்தரவு தற்காலிக நிறுத்தம்
வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்திவைத்துள்ளது.
வனப்பகுதியில் பட்டா இல்லாத 11.8 லட்சம் பழங்குடியினரை வெளியேற்ற கடந்த 13-ஆம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்டு பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் தற்போது நிறுத்திவைத்துள்ளது. அத்துடன் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.