\
அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு

அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு

அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு
Published on

அரசுப் பணிகளில் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றும்படி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுத் துறைகளில் பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீட்டு முறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாநில அரசுகளும் இம்முறையை பின்பற்ற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்துமா என்ற குழப்பம் இருந்தது, தற்போது அது நீங்கிவிட்டது என தெரிவித்தார். மத்திய அரசில் மட்டுமின்றி, மாநி‌ல அரசுத் துறைகளிலும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு பொருந்தும் என அவர் கூறினார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com